Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3295 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3295திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஐயோ! என்மகள் திருக்கோளூரிலே எப்பாடு படுகிறாளோ வென்கிறாள் தாய்.) 3
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3
பூவை,Poovai - பூவைகளென்ன
பை கிளிகள்,Pai kilikal - பசுமைதங்கிய கிளிகளென்ன
பந்து,Pandhu - பந்துகளென்ன
தூதை,Thoothai - சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன
பூ புட்டில்கள்,Poo puttilkal - பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான)
யாவையும்,Yaavaiyum - இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம்
திருமால் திரு நாமங்களே,Thirumaal thiru naamangale - பகவானுடைய திருநாமங்களினாலேயாம்படி
கூவி,Koovi - அத்திருநமங்களைச் சொல்லியழைத்து
எழும்,Ezhum - உஜ்ஜீவிப்பவளான
என் பாவை,En paavai - எனது பெண்பிள்ளை யானவள்
இனி,Ini - இங்கே ஒரு குறையற்றிருக்கச் செய்தேயும்.
தண் பழனம் திரு கோளுர்க்கே போய்,Than pazhanam thiru kolurkkay poi - குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய திருக்கோளூர்க்கே புறப்பட்டுப்போய்
கோவை வாய் துடிப்ப,Kovai vaay thudippa - கோவைப்பழம் போன்ற அதரம் துடிக்கும்படியாக
மழை கண்ணொடு,Mazhai kannodu - நீர்பெருகப்பெற்ற கண்களோடே நின்று
என் செய்யும் கொலோ,En seyyum kolo - என்னபாடுபடுவளோ! (அவ்விருப்பை நான் காணப்பெற்றிலேனே! என்று அலமருகின்றாளென்க)