திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3296 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3296திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (என் மகளுடைய நடவடிக்கையைக் கண்டு உலகத்தார் உகப்பர்களோ! அன்றி, வெறுப்பர்களோ வென்று சங்கிக்கிறாள் தாய்.) 4
கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ? சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே! செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4
பதவுரை Show / Hide
இள மான்,Ila maan - இளமான் போன்ற என்மகள்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே,Selvam malgi avan kidantha thirukolurkkay - செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே
மெல் இடை நுடங்க,Mel idai nudanga - மெல்லிய (தனது) இடை நோகும்படி
செல்ல மேளினளே,Sella melinaLae - புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி)
சில்லை வாய் பெண்டுகள்,Sillai vaai pendaL - வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு
அயல் சேரி உள்ளாகும்,Ayal seri uLlaagum - அயல் சேரியிலுள்ள பெண்களும்
கொல்லை என்பர் கொலோ,Kollai enbar kolo - இவள் வரம்பு கடந்து நடந்தவள்“ என்று சொல்லிப் பழிப்பர்களோ அல்லது)
குணம் மிக்கனள் என்பர் கொலோ,Gunam mikkanal enbar kolo - விலக்ஷணகுண முடையவள்“ என்று சொல்லிக் கொண்டாடுவர்களோ!
எல்லை,Yellai - என்னாகுமோ!