| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3297 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூர்க்கு நடந்த என்மகள் அங்குச் சோலைகளையும் பொய்கைகளையும் அவன் கோயிலையுங்கொண்டு ஆச்சரியமான உகப்பை அடைவளே, அந்தோ! அவ்வுகப்பை நான் காணக் கொடுத்து வைக்கவில்லையே! என்று தளர்கின்றாள் தாய்.) 5 | மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத் தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5 | ஏன் சிறு தேவி,Yen siru devi - வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள் மேவி,Mevi - பகவந் குணங்களிலே யீடுபட்டு நைந்து நைந்து,Naindhu naindhu - மிகவும் இளைத்து விளையாடல் உறாள்,Vilayaadal ural - (தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய் போய்,Poi - இங்கு நின்றும் போய் தன் திருமால் திருக்கோளூரில்,Than thirumaal thirukoluril - தனக்கு அஸாதாரணானான எம்பெருமானுடைய திருக்கோளூரில் பூ இயல் பொழிலும் ஸ்ரீ,Poo iyal pozhilum sri - பூக்களை இயல்பாகவுடைய சோலைகளையும் தடமும்,Thadamum - தடாகங்களை அவன் கோயிலும்,Avan koyilum - அவனது திவ்ய ஸந்நிதியையும் கண்டு,Kandu - பார்த்து ஆவி உள் குளிர,Aavi ul kulira - நெஞ்சு குளிரும்படியாக இன்று எங்ஙனே உகக்கும் கொல்,Indru engane ukakkum kol - இன்று எவ்வண்ணம் களித்திருப்பளோ! (அந்நிலைமையை நான் காணப்பெற்றிலேனே!) |