திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3298 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3298திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (கீழ்ப்பாட்டில் “எங்ஙனே யுகக்குங்கொல்!“ என்றாள், அவள் உகக்கும்படியைப் பாசுரமிட்டுச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த் தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6
பதவுரை Show / Hide
எனக்கு,Enakku - தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு
இன்று,Indru - இப்போது
உதவாது அகன்ற,Udhavathu akanra - உசாத்துணையாக இராதே கைகழித்துபோன
இள மான்,Ila maan - இளமான்போன்ற என்மகள்
போய்,Poi - வருந்தி வழிநடந்து போய்
தென்திசை திலதம் அனையை,Thenthisai thilatham anaiyai - தெற்குத் திசைக்கு அலங்காரமான
திருக்கோளூர்க்கே சென்று,Thirukolurkkay sendru - திருக்கோளூரிலே பிரவேசித்து
இனி,Ini - அங்ஙனம் புகுந்த பின்பு தன்னை வசீகரிக்க அத்திருமாலினுடைய
திருக்கண்ணும் செம்வாயும் கண்டு,Thirukkanum semvayum kandu - திருக்கண்களையும் செவ்விய அதரத்தையும் கண்டு
நெடு கண்கள் பனிமல்க,Nedhu kangal panimalga - தனது விசாலமான கண்களில் ஆனந்த பாஷ்பம் நிரம்பப்பெற்று (ஹர்ஷப்ரகர்ஷத்தாலே)
நின்று நின்று நையும்,Ninru ninru nayum - ஒன்றுஞ் செய்யமாட்டாதே சிதிலையாகி நிற்பள்