திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3299 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3299திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (தன்மகள் திருக்கோளூரெம்பெருமானுடைய திருக்கண்ணும் செவ்வாயுங்கண்டு கண்ணீர் பெருகநிற்பவள் என்று கீழ்ப்பாட்டில் ஊஹித்துப்பேசின திருத்தாயார், அவள் திருக்கோளூரளவும் சென்று சேர்ந்தாளாகிலன்றோ அங்ஙனே யிருப்பது, இவள்தான் அத்தனை தூரம் வழிநடந்து முடிந்து சென்று சேர்ந்த பிறகு நடக்கக்கூடியதை இப்போது சிந்திக்க இடமேது? என்கிறாள்.) 7
மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய் அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச் செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7
பதவுரை Show / Hide
மல்கு நீர் கண்ணொடு,Malku neer kannodu - (என் மகளானவள்) நீர் நிரம்பிய கண்களையுடையவளாயும்
மையல் உற்ற மனத்தனள் ஆய்,Maiyal utra manathanal aai - வியாமோஹம் கொண்ட நெஞ்சையுடையளாயும்
நல் அல்லும் பகலும்,Nal allum pagalum - நல்ல இரவிலும் பகலிலும் (தவறாது)
நெடு மால் என்று அழைத்து,Nedu maal endru azhaiththu - ஸர்வேச்வரனே! என்று கூப்பிட்டுக்கொண்டிருந்து,
இனி,Ini - இப்போது
ஒல்கி ஒல்கி நடந்து,Olgi olgi nadandhu - ஒடுங்கியொடுங்கி அசைந்து நடந்து
ஒசிந்து போய்,Osindhu poi - தளர்ந்து சென்று செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
எங்ஙனே புகும்கொல்,Engane pugum kol - எப்படி போய்ச் சேர்ந்திருப்பளோ?