திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3301 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3301திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய்.) 9
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச் சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9
பதவுரை Show / Hide
நேர் இழை,Ner izhai - நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,
காரியம் நல்லனகள் அவை காணில்,Kaariyam nallanakal avai kaanil - பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்
என் கண்ணனுக்கு என்று,En kannanukku endru - “இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து
ஈரியாய் இருப்பாள்,Eeriyaai iruppaal - ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்
இது எல்லாம் கிடக்க,Idhu ellam kidakka - இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்
இனி,Ini - இப்போது
போய்,Poi - வெளியேறிச் சென்று
சேரி பல் பழி தூய் இரைப்ப,Seri pal pazi thooyiraippa - சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக
திருக்கோளூர்க்கே நடந்தாள்,Thirukolurkkay nadandhaal - திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள்,
எம்மை ஒன்றும் நினைத்திலன்,Emmai ondrum ninaithilan - எங்களை ஒரு பொருளாக மதித்திலன்