திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3302 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்.) 10 | நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10 | பதவுரை Show / Hideதெய்வங்கள்,Dheivangal - தெய்வங்களே! நினைக்கிலேன்,Ninaikkilen - எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, நெடு கண் இளமான்,Nedu kann ilamaan - பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள் இனி போய்,Ini poi - இப்போது சென்று அனைத்து உலகும் உடைய,Anaiththu ulagam udaiya - ஸர்வலோக ஸ்வாமியான அரவிந்த லோசனனை,Aravinda losananai - செந்தாமரைக் கண்ணனை தினை தனையும் விடாள்,Thinai thanaiyum vidaal - சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு அவன் சேர் திருக்கோளூர்க்கே,Avan ser thirukolurkkay - அவன் வர்த்திக்கும் திருக்கோளூரை நோக்கியே செல்ல வைத்தனள்,Sella vaiththanal - சடக்கெனச் சென்றாள், மனைக்கு வான் பழியும் நினையான்,Manaikku vaan pazhiyum ninaiyaan - தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென் பதையும் நினைத்திலள். |