| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3304 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (எம்பெருமான் திறத்தில் புருஷகாரக்ருத்யம் பண்ணுமவர்களுக்கு உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாது என்கிற சாஸ்த்ரார்த்தம் இப்பாட்டில் வ்யக்தமாகிறது.) 1 | பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ? நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன் முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1 | நல் நலன் புள் இனங்காள்,Nal nalan pul inangkaal - சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே! விளையாட்டியேன் நான் இரந்தேன்,Vilayaattiyen naan irantheen - பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்) முன் உலகங்கள் எல்லாம் படைத்த,Mun ulagangal ellam padaitha - முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின முகில் வண்ணன்,Mugil vannan - காளமேக நிறத்தனாயும் கண்ணன்,Kannan - அடியார்க்கு எளியனாயும் என் நலம் கொண்ட,En nalam konda - எனது நன்மைகளை யெல்லாம் கவர்ந்து கொண்டவனாயுமிருக்கிற பிரான் தனக்கு,Piraan thanakku - எம்பெருமானுக்கு என் நிலைமை உரைத்து,En nilamai uraiththu - எனது அவஸ்தையைச் சொல்லி பொன்உலகு ஆளீர்புவனி முழுது ஆளீர்,Pon ulagu aaleer bhuvani muzhuvadhum aaleer - உபய விபூதியையும் ஆளுங்கோள். (இதுவே எனது வேண்டுகோள்) |