திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3305 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3305திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள்.) 2
மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ? கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2
பதவுரை Show / Hide
கிளிகாள்,Kilikal - கிளிகளே!
கை அமர் சக்கரம்,Kai amar sakkaram - திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும்
கனி வாய்,Kani vaai - கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான
என் பெருமானைகண்டு,En perumanaikandu - எம்பெருமானைச் சேவித்து
மெய் அமர் காதல் சொல்லி,Mei amar kaadhal solli - உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து
விரைந்து ஓடி வந்து,Virainthu odi vandhu - உடனே இவ்விடம் வந்து சேர்ந்து
மை அமர் வாள் நெடு கண்,Mai amar vaal nedu kann - மையணிந்து அழகிய நீண்ட கண்களையுடைய
மங்கைமார் முன்பு,Mangaimaar munbu - தோழிமார் முன்னிலையிலே
என் கை இருந்து,En kai irundhu - என் கையிலே வீற்றிருந்து
நெய் அமர் இன் அடிசில்,Nei amar in adisil - நெய்யோடு பொருந்திய இனிய இடிசிலை
பாலோடு,Paalodu - பாலோடுங்கூட
நிச்சல் மேலீர்,Nichal meleer - நித்யமாக ஸ்லீகரிக்க வேணும்.