Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3307 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3307திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னை நோவுபடுத்திப்போய் எட்டா நிலத்திலே ஒலக்கமிரூக்கை தான் ஒரு ஸ்ரீமத் காம்பீர்யமோவேன்று கேளுங்கோளென்று திருநாட்டிலே சில தும்பிகளைத் தூது விடுகிறாள்.) 4
தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4
முல்லைகள் மேல்,Mullaigal mel - முல்லைப்பூக்களிலே வாழ்கிற
என் தும்பிகாள்,En thumpigal - எனக்கு இனிய தும்பிகளே!
தூ மது வாய்கள்,Thoo madhu vaaygal - தூய மதுவிலே படியவேண்டிய வாயைக்கொண்டுவந்து
பூ மது உண்ண செல்லில்,Poo madhu unnam sellil - அந்த முல்லைப்பூக்களில் மதுவை யுண்ணச் செல்ல நினைத்திர்களாகில் (அதற்காக நீங்கள் செய்யவேண்டியதொன்றுண்டு அது என்னென்னில்)
வினையெனை,Vinaiyenai - பிரிந்து வருந்தவேண்டிய பாவத்தைப் பண்ணின என்னோடே
பொய் செய்து,Poi seydhu - க்ருத்ரிமமான கலவியைப்பண்ணி
அகன்ற,Agandra - பிரிந்துபோன
மா மது வார் தண் துழாய் முடி,Maa madhu vaar than thuzhai mudi - பெருவெள்ளமான மது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை முடியிலணிந்துள்ள
வானவர்கொனை,Vaanavarkonai - நித்யஸூரிநாதனை
கண்டு,Kandu - நேரில் ஸேவித்து
யாம் இதுவோ தக்க ஆறு என்ன வேண்டும் நுங்கட்கு,Yaam idhuvo thakka aaru enna vendum nungadku - “நாம் இப்படி மேன்மை கொண்டாடியிருப்பதோ தகுதி?“ என்று நீங்கள் சொல்லவேண்டும்.