திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3308 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3308திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மீண்டும் கிளிகளை விளித்துச் சொல்லுகிறாள். எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு “உம்முடைய தக்கவாறு இதுவோ“ வென்னுங் கோளென்கிறாள்.) 5
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்! வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5
பதவுரை Show / Hide
யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kiligal - நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே!
வம்மின்,Vammin - இப்படி வாருங்கள்
நுங்கட்கு யான் உரைக்கேன்,Nungadku yaan uraikkean - உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன்.
வெம் கண் புள்,Vem kann pul - வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை
ஊர்ந்து வந்து,Oorndhu vandhu - நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து
வினையேனை நெஞ்சம் கவர்ந்த,Vinaiyenai nenjam kavarntha - பரவியான என்னுடைய உள்ளத்தைக கொள்ளைகொண்ட
செம் கண்,Sem kann - புண்டரீகாஷனும்
கரு முகிலை,Karu mugilai - காளமேகச்யாமனும்
செய்யவாய்,Seyya vaai - சிவந்த அதரத்தை வுடையவனும்
செழு கற்பகத்தை,Sezhu karpagaththai - விலக்ஷண கல்பவ்க்ஷம்போன்ற வனுமான எம்பிரானை
எங்கு ஆகிலும் சென்று கண்டு,Engu aagilum sendru kandu - எவ்விடத்திலாவது சென்று சேவித்து
இதுவோ தக்க ஆறு என்மின்,Idhuvo thakka aaru enmin - இதுதானோதகுதியென்று சொல்லுங்கோள்.