| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3309 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே நமக்கு அபேக்ஷிதங்கள் செய்யுமவன் பாடே சென்று இதுவோ தக்கவாறு என்று சில பூவைகளைக் குறித்து சொல்லுகிறாள்.) 6 | என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான் கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச் சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6 | தீ வினையேன் வளர்த்த,Thee vinaiyen valartha - கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த சிறு பூவைகளே,Siru poovaikale - சிறு பூவைப்பறவைகளே! என் மின்னு நூல் மார்வன்,En minnu nool maarvan - மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும் என் கரும் பெருமான்,En karum perumaan - தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும். என் கண்ணன்,En kannan - எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான் தன் நீற் கழல் மேல் மன்னு தண் துழாய்,Than neer kazhal mel mannu than thuzhai - தனது நெடிய திருவடிகளின்மீது பொருந்தியுள்ள திருத்துழாயை நமக்கு அன்றி நல்கான்,Namakku anri nalkaan - நமக்குத் தவிர வேறொருவர்க்கும் கொடுக்ககில்லான், கன்மின்கள் என்று,Kanminkal endru - “நான் சொல்லிக்கொடுப்பதை அப்யஸியுங்கோள்“ என்று சொல்லி யான் உம்மை கற்பியா வைத்த,Yaan ummai karpiya vaitha - நான் உங்களுக்குக் கற்பித்து வைத்த மாற்றம் சொல்லி,Maatram solli - பாசுரங்களைச் சொல்லிக்கொண்டு சென்மின்கள்,Senminkal - அப்பெருமானிடம செல்லுங்கோள் |