திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3310 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3310திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -பரம சேதனன் பொகட்டுப் போனான் -சைதன்யம் லேசம் உடைய பக்ஷிகள் பறந்து போயினவும் அந்நிய பரமாயினவும் ஆயிற்றன -இதுக்கு ஹேது சேதனங்களையோ -என்று பார்த்து -அசேதனமான பாவையை இரக்கிறாள்) 7
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான் மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப் பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7
பதவுரை Show / Hide
பாவைகள்,Paavaigal - எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே!
பூவைகள் போல நிறத்தன்,Poovaigal pola nirathan - பூவைப்பூவண்ணனும்
புண்டரீகங்கள் போலும் கண்ணன்,Pundareekangal polum kannan - புண்டரீகாக்ஷனும்
யாவையும் யாவரம ஆய்நின்ற,Yaavaiyum yaavarama aay nindra - ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனும்
என் ஆழி பிரான்,En aazhi piraan - கையுந்திருவாழியுமான அழகை எனக்குக் காட்டித்தந்தவனும்
மாவை வல் வாய் பிளந்த,Maavai val vaai pilantha - குதிரை வடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மகரனுடைய வலியவாயைக்கீண்டு அவனை முடித்தவனுமான
மதுசூதற்கு,Madhusoodharku - மதுஸூதநனுக்கு
வினையாட்டியேன் பாசறவு,Vinaiyaattiyen paasaaravu - பாலியான என்னுடைய நிறக்கேட்டை
தீர்க்கிற்றிரே,Theerkitrire - தீர்க்க வல்லிகோளோ? (தீர்க்க வேணும் என்றபடி)