Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3313 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3313திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மஹாகோஷ்டியிலே எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில் திருவுள்ளம் அந்யபரமாயிருக்குமாதலால் அப்போது சொல்லாதே, திருவோலக்கத்தில் நின்று மெழுந்து திவ்யாந்தபுரத்திலே யெழுந்தருளினால் அங்கே பிராட்டியுடைய திவ்யஸந்நிதானத்திலே திருவுள்ளத்திற்படும்படி என் திறம் விண்ணப்பஞ்செய்து அவனுரைக்கும் மறுமாற்றாங்கொண்டு என்னருகே வந்திருந்து சொல்லவேணுமென்று அன்னங்களைக்குறித்து வேண்டுகிறாள்.) 10
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10
வந்து இருந்து,Vandhu irundhu - (ஏற்கனவே என் கண்னெதிரில் வந்திருந்து)
உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம்,Ummudaiya mani sevalum neerum ellaam - உங்களுடைய அழகிய சேவல்களும் (அவற்றுக்கு இனிய) நீங்களும் ஆக எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி,Antharam onrum inri - இடையீறு ஒன்றுமில்லாமல்
அலர்மேல் அசையும்,Alarmael asaiyum - பூக்களின் மீது உல்லாஸமாக உலாவுகிற
அன்னங்காள்,Annangaal - அன்னப்பறவைகளே!
என் திருமார்வற்கு,En thirumaarvarku - லஷ்மீபதியான எமபெருமானுக்கு
என்னை,Ennai - என்னைப்பற்றி ப்ரஸ்தாவித்து
இவள் இன்ன ஆறு காண்மின் என்று,Ival inna aaru kaanmin endru - “இப்பராங்குசநாயகி இவ்வண்ணமானாள் காணும்“ என்று
மந்திரத்து,Mandhiraththu - அவளும் அவனுமான தனி யிடத்திலே
ஒன்று உணர்த்தி,Onru unarththi - ஒரு பேச்சு அறிவித்து
மறு மாற்றங்கள் உரையீர்,Maru maatramgal uraiyeer - அதற்கு அவன் சொல்லும் மறு மொழிகளை என்னிடத்தே வந்து சொல்லுங்கோள்.