Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3315 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3315திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார்.) 1
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1
நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய்,Neer aay nilan aay thee aay kaal aay kedu vaan aay - பஞ்ச பூதஸ்வரூபியும்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்,Seer aar sudhargal irandu aay - சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும்
சிவன் ஆய்,Sivan aay - சிவனுக்கு அந்தர்யாமியும்
அயன் ஆனாய்,Ayan aanaay - பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்!
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி,Koor aar aazhi ven sangae aendhi - கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில் தரித்துக்கொண்டு
மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் களிக்கும்படி
ஒருநாள்,Oru naal - ஒருநாளாகிலும்
வாராய்,Vaarai - வந்தருளவேணும்.