திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3317 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (கீதையில் * பரித்ராணாய ஸாதூநாம் … ஸம்பவாமி யுகேயுகே * என்றதை நினைப்பூட்டி “ஸமய விசேஷங்களலே எத்தனையோ விதமாக அவதாரங்கள் செய்வென்கிறார்.) 3 | ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3 | பதவுரை Show / Hideஉகம் தோறு,Ugam thooru - ஒவ்வொரு யுகத்திலும் ஞாலத்தூடே,Nyaalaththooda - பூமியிலே அவதரித்து நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும்,Nadaththum ninrum kidandhu irundhum - நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து சால பல நாள்,Saala pala naal - பல்லாயிரமாண்டளவும் உயிர்கள் காப்பானே,Uyirkal kaappaanai - பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே! கோலம் திரு மா மகளோடு,Kolam thiru maa makhalodu - உன்னழகுக்கு ஏற்ற அழகுடையளான திருமாமகளுடனே (கூடியிருக்கிற) உன்னை கூடாதே,Unnai koodaadhe - உன்னைக்கிட்டி யநுபவிக்கப்பெறாமல் சால பல நாள்,Saala pala naal - (மேலுள்ள) மிகப்பலகாலமெல்லாம் இன்னும் அடியேன் தளர்வேனோ,Innum adiyaen thalarveeno - உன்னுறவு பெற்று வைத்தும் அடியேன் இழந்து துடிப்பது தானே? |