திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3318 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரபலமான சகடாஸூரனை நிரசித்த நீ வருகைக்கு விரோதி யுண்டாகிலும் அத்தைப் போக்கி நான் காணும்படி வர வேணும் என்கிறார்) 4 | தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4 | பதவுரை Show / Hideசகடம் அசுரர் உடல்,Sakadam asurar udal - சகடாசுரனுடைய உடலானது தளர்ந்தும் முறிந்தும்,Thalarndhu murindhu - சின்ன பின்னமாகி வேறு ஆ பிளந்து வீய,Veru aa pilandhu veeya - இருபிளவாகி உருமாய்ந்தொழியும்படியாக திரு கால் ஆண்ட பெருமானே,Thiru kaal aanda perumaanai - திருவடிகளைக் கொண்டு காரியங் கொண்ட ஸ்வாமியே! பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர்,Brahman Sivan Indiran vinnavar - பிரமன் முதலான தேவர்களெல்லாம் கிளர்ந்து சூழ,Kilarndhu soozh - உத்ஸாஹத்தோடே வந்து சூழ்ந்துஸேவிக்க விளங்க,Vilanga - அதனாலே ஒரு விளக்கம் உண்டாகும்படியாக ஒரு நாள்,Oru naal - ஒரு நாளாகிலும் வீண் மீது காணவாராய்,Veen meedhu kaanavaaraai - ஆகாசத்தின்மேலே கண்ணுக்குத் தோற்ற எழுந்தருளாய். |