| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3319 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற ஐந்து ப்ரகாரங்களைக் கொண்டு அடியார்களை உகப்பித்தருளாநின்ற நீ எனது நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து வைத்து என் கண்ணுக்குத் தோற்றாதேயிருந்தால் தளரமாட்டேனோ வென்கிறார்) 5 | விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்! மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்! எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5 | விண் மீது இருப்பாய்,Vinn meedhu iruppaay - பரமபதத்தில் வீற்றிருப்பவனே! மலை மேல் நிற்பாய்,Malai meel nirppaa - (அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே! கடல் சேர்ப்பாய்,Kadal seerppaa - திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே! மண் மீது உழல்வாய்,Mann meedhu uzhalvaay - (ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே! இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,Ivattrul engum maraindhu uraivaay - இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே! எண் மீது இயன்ற புறம் அண்டத்தாய்,Enn meedhu iyandra puram andaththaa - எண்ணிக்கைக்கு மேலே போகக் கடவதான (எண்ணிறந்த) பஹிரண்டங்களிலு முளனானவனே! (நீ) எனது ஆவியுள்,Enadhu aaviyul - என்னுடைய நெஞ்சுக்குள்ளே மீதாடி,Meedhaadi - மிகவும் நடையாடி விட்டு உரு காட்டாதே,Uru kaattaadhe - வடிவைக் கண்ணுக்காட்டாமல் ஒளிப்பாயோ,Oli paayo - ஒளிக்கின்றாயே! இது தகுதியோ? |