திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3321 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3321திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பிரானே! எல்லாம் உன்னுடைய ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார்.) 7
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ! அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7
பதவுரை Show / Hide
உலகில் திரியும் கருமம் கதி ஆய்,Ulagil thiriyum karumam kathi aay - லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும்
உலகம் ஆய்,Ulagam aay - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்,Ulakukke oru uyirum aanaay - ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே!
புறம் அண்டத்து,Puram andaththu - அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய்
அலகு இல் பொலிந்த,Alaku il polinda - எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய்
திசை பத்து ஆய,Disai paththu aay - பத்துத்திசைகளிலும் ஞானத்தாலே வ்யாப்தாயிருக்கின்ற முக்தாத்மாக்களை வடிவாகவுடையவனே!
அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு,Alaku il polinda arivilenukku - எண்ணிக்கையில்லாதபடி விளங்குகின்ற அஜ்ஞானத்தையுடையேனான என் விஷயத்தில்
அருளாய்,Arulai - க்ருபைபண்ணவேணும்.