திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3323 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3323திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உனக்கு விதேயமான விஷய இந்திரியங்கள் நடையாடுகிற தேசத்திலே வைத்து என்னை முடிக்கத் தேடுகிறாயோ உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ளும் காலம் அணித்தது ஆகாதோ என்கிறார்.) 9
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ? தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9
பதவுரை Show / Hide
ஆவி திகைக்க,Aavi thigaiyka - நெஞ்சு கலங்கும்படியாந
ஐவர் குமைக்கும்,Aivar kumaikkum - பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான
சிற்றின்பம்பல,Sitrinbampala - அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை
பாவியேனை நீ காட்டி,Paaviyeanai nee kaatti - பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து
படுப்பாயோ,Paduppaayoo - முடிக்க நினைக்கிறாயோ?
வையம் தாவி,Vaiyam thaavi - பூமி முழுவதையும் அளந்து கொண்ட ஸ்வாதீனமாக்கிக் கொண்ட
தட தாமரை கட்கே,Thada thamarai kattke - பெரிய திருவடித் தாமரைகளிலே நான் அந்வயிக்கும்படி
கூவிக்கொள்ளும் காலம்,Koovikkollum kaalam - என்னை யழைத்துக் கொள்ளுங்காலம்
இன்னம் குறுகாதோ,Innam kurukaadho - இன்னமும் ஸமீபித்ததாக ஆகக்கூடாதோ?