| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3326 | திருவாய்மொழி || 6-10–உலகம் 1 | உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே! நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே! குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1 | ulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே! ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே! adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே! ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே! kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன் una paadham,உன பாதம் - உனது திருவடிகளை koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும். |