| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3330 | திருவாய்மொழி || 6-10–உலகம் 5 | புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ! புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ! திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே! திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5 | anru,அன்று - ராமாவதாரத்திலே punaraa nindra maram ezh,புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை eydha,எய்த - துளைபடுத்தின oru vil valavaa o,ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே! punar ey nindra maram irandin naduve,புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே pon,போன் - தவழ்ந்து சென்ற mudhalvaa o,முதல்வா ஓ - ஓ மூலபுருஷனே! thinar aar megham ena,திணர் ஆர் மேகம் என - தின்மை மிக்க மேகங்களென்னும்படி kaliru serum,களிறு சேரும் - யானைகள் சேருமிடமான thiruvengadath thaane,திருவேங்கடத் தானே - திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே thinar aar saangathu,திணர் ஆர் சார்ங்கத்து - திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய una paadham,உன பாதம் - உனது திருவடிகளை adiyen saervadhu ennaal,அடியேன் சேர்வது எந்நாள் - அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ? |