| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3332 | திருவாய்மொழி || 6-10–உலகம் 7 | அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே! செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே! நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7 | adiyen mevi amarkindra amudhae,அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே! emaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே! adu pul kodi aa udaiyaane,அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே! kolam kanivai perumaane,கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே! chedi aar vinaigal theer marundhae,செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே! un paadham kaana,உன பாதம் காண - உனது திருவடிகளைக் காண்கைக்கு noolaadhu,நோலாது - நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே) nodi aar pozhudhum,நொடி ஆர் பொழுதும் - ஒரு க்ஷண மாத்திரமும் aatren,ஆற்றேன் - தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன் |