| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3333 | திருவாய்மொழி || 6-10–உலகம் 8 | நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின் நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே! மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8 | nun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும் nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும் indiranum,இந்திரனும் - தேவேந்திரனும் un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும். |