| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3335 | திருவாய்மொழி || 6-10–உலகம் 10 | அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா! நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10 | alar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார் iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே! nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே! ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே! ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே! vaane,வானே - பவனே! amarar,அமரர் - தேவர்களும் muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும் virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான் un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன் |