திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3337 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார்.) 1 | உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1 | பதவுரை Show / Hideஎண்இலாபெரு மாயனே,Ennilaaperu Maayane - அளவிடமுடியாத ப்ரக்ருதி தத்வத்தை உபகரணமாக வுடையவனே! இமையோர்கள் ஏத்தும்,Imayorkal eththum - தேவர்களாலே துதிக்கப்படுபவனும் உலகம் மூன்று உடை,Ulagam moonru udai - மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான அண்ணலே,Annale - ஸ்வாமியே! அமுதே,Amuthe - பரம போக்யனே அப்பனே,Appane - மஹோபகாரங்கள் செய்பவனே! என்னை ஆள் வானே,Ennai aal vaane - என்னை நிர்வஹித்துக் கொண்டு போருமவனே!, என்னை,Ennai - அடியனே உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி,Ul nilaaviya aivaraal kumaithiitri - உள்ளே நிரந்தரவ லீஸம் பண்ணுகின்றபஞ்சேந்திரியங்களாலும் நலிவுறும்படி பண்ணி உன் பாதபங்கயம்,Un paathapankajam - உனது திருவடித்தாமரைகளை நண்ணிலா வகையே,Nannilaa vagaiye - கிட்டாதபடியாகவே இன்னும் நலிவான்,Innum nalivaan - இன்னமும் ஹிம்ஸிப்பதாக எண்ணுகின்றாய்,Ennungindraal - எண்ணியிருக்கிறாய் போலும் |