திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3339 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3339திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (ஆழ்வீர்! உம்மை நான் இந்த ப்ரக்ருதியிலே வைத்தது ஒரு ப்ரயோஜனத்துக்காகக் காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, பிரானே! என்னை இப்படி நலிவித்து என்ன ப்ரயோஜனம் கொள்ளப் பார்க்கிறாய்? என்கிறார்.) 3
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச் சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3
பதவுரை Show / Hide
ஆகி ஆகி,Aagi aagi - காரணபூதனாய்க் கொண்டு
அகல் இடம் படைத்து,Akal idam padaiththu - விஸ்தாரமான ஜகத்தை ஸ்ருஷ்டித்து
உண்டு,Undu - (பிரளயத்திலே) வயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்து (ஒரு கால்) அளந்து
இடந்திட்ட,Idandhitta - (வரஹரூபியாய்) இடந்தவனே!
சோதி நீள் முடியாய்,Sothi neel mudiyai - உஜ்ஜ்வலமாய் நீண்ட திருவபிஷேகத்தை யுடையவனே!
தொண்டனேன் மது சூதன்னே!,Thondan en madhu soodhanne! - என்னை யீடுபடுத்திக் கொண்ட மதுசூதனனே
விணையேனே,Vinaiyene - பாவியான வென்னை
வேதியான நீற்கும் ஐவரால்,Vedhiyanaa neerkum aivaraal - இடைவிடாதே நலியும் பஞ்சேந் திரியங்களாலே
மோதுவித்து உன் திருவடி சாதியாவகை,Modhuviththu un thiruvadi saadhiyaavakai - உன் திருவடிகளைக் கிட்டாதபடி
நீ தடுத்து என் பெறுதி,Nee thaduththu en perudhi - நீ தடை செய்து என்ன பயன் பெற்றாயாகிறாய்;
அந்தோ,Andho - ஐயோ!