| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3340 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பீரானே! உன் திருவடிகளைப் பெறுவதற்கு உபாயம் உன் திருவடிகளே யென்றிருக்கிற இந்த என்னுடைய அறிவுங்கூட அழியும் படி இந்திரியங்களைக் கொண்டு என்னைக் கலக்கி உன் திருவடிகளைச் சேராதபடி பண்ணவா நினைத்திருக்கிறாய் என்கிறார்.) 4 | சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப் போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4 | யாதும் யாவரும் இன்றி,Yaadhum yaavarum indri - சேதநாசேதநப் பொருள்களொன்றொழியாமல் நின் அகம் பால் ஒடுக்கி,Nin agam paal oduki - உன் திருவயிற்றின் ஏக தேசத்திலே ஒதுங்கும் படி பண்ணி ஓர் ஆலின் நீள் இலை மீது,Or aalin neel ilai meedhu - ஓர் ஆலமரத்தினுடைய சிறிய இலையின் மீது சேர்குழவி,Ser kuzavi - குழந்தையாய்க் கண்வளர்ந்தருளினவனே! வினையேன் வினை தீர் மருந்தே,Vinaiyen vinai theer marundhe - பாவியேனான வென்னுடைய பாவங்களைத் தீர்க்கும் மருந்தானவனே! ஒர் ஐவரை காட்டி,Or aivarai kaatti - பஞ்சேந்திலீயங்களைக் காட்டி நான் சூது அறியாவகை,Naan soodhu ariyaavakai - தான் உறுவது அறியாதபடி சுழற்றி,Suzhatri - என்னை மருளப்பண்ணி உன் அடி போது நான் அணுகா வகை செய்து,Un adi poadhu naan anugaa vakai seidhu - உன் திருவடி மலர்களை நான் கிட்டாதபடி பண்ணி போதி கண்டாய்,Pothi kandai - கண்காணாதபடி கடக்க நிற்கின்றாயே! |