| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3342 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நம்மிற் காட்டில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று ப்ரஹித்தி பெற்றவர்களையும் நலியக்கடவ இந்திரியஙகள் என்னை என்ன பாடுபடுத்தா? என்கிறார்.) 6 | விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்? பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென் கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6 | விண் உளார்,Vin ulaar - விண்ணுலகில் உள்ளவர் களாய்க்கொண்டே பெருமாற்கு,Perumaarku - பராத்பரனான உனக்கு அடிமை செய்வாரையும்,Adimai seyvaaraiyum - அடிமைசெய்பவர் காளன நித்யஸூரிகளையும் மண்ணுள்,Mannul - இந்நிலத்திலே செறும்,Serum - மேலிட்டு நலியக்கூடிய ஐம்புலன் இவை,Aimpulan ivai - இந்த பஞ்சேந்திரியங்கள் என்னைப் பெற்றால் என் செய்யா,Ennaip peral en seyya - (இவற்றை வெல்லுதற்குரிய வலிமையற்ற) என்னிடம் வந்து சேர்ந்தால் இவை என்னதான் செய்ய மாட்டா? மற்று,Matru - அதற்கு மேலே நீயும் விட்டால்,Neeyum vittaal - சக்தனான நீயும் கை விட்டால் (என்செய்யா),(En seyya) - என்ன செய்யமாட்டா? (எதுவும் செய்யக்கூடுமன்றோ.) பண் உளாய்,Pan ulaay - ஸ்வரத்தை அறியுமவனே! கவிதன் உளாய்,Kavithan ulaay - (என்னுடைய ஆர்த்தியே வடிவெடுத்த சொற்களே யறியுமவனே! பத்தியின் உள்ளாய்,Pattiyin ullaay - என்னுடைய ஆற்றாமையை அறியுமவனே! பரம் ஈசனே,Param eesanee - பராத்பரனே! என் கண் உளாய் நெஞ்சு உளாய் சொல் உளாய்,En kan ulaay nenju ulaay sol ulaay - என்னுடைய கண்ணோடும் நெஞ்சோடும் வாகிந்திரியத்தோடும் வாசியற உள்ளே ஸந்நிதி பண்ணியிரப்பவனே! வந்து,Vandu - என்னளவில் வந்து ஒன்று சொல்லாய்,Ondru sollaay - (அபயமாக) ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும். |