திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3343 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3343திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (அடியார்கட்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டுவதையே இயல்வாக வுடையனான உன்னுடைய கருணையில்லாயாகில் பிரபரமான இந்திரியங்களை நான் வெல்லுவதென்றொரு பொருளுண்டோ வென்கிறார்.) 7
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்? அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7
பதவுரை Show / Hide
அன்று,Andru - பண்டொரு காலத்திலே
தேவர் அசுரர்,Devar Asurar - தேவர்களும் அசுரர்களும்
வாங்க,Vaang - வலிக்கும்படியாக
அலைகடல்,Alaikadal - அலையெறிகிற கடலிலே
அரவம் அளாவி,Aravam Alaavi - வாஸூதி யென்கிற பாம்பைச் சுற்றி
ஓர் குன்றம்,Or Kunram - மந்தர மலையை
வைத்த எந்தாய்,Vaittha Endhaay - நாட்டின் பெருமானே!
கொடியேன் பருகு இன் அமுதே,Kodiyen Parugu Inn Amudhe - பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!
உன்திரு அருள் இல்லை ஏல்,Unthiru Arul Illai Ael - உன்னுடைய கருபை இல்லை யாகில்,
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒர் ஐவர்வன் கயவரை,Ondru Solli Oruthinil Nirgiladha Or Aivarvan Kayavarai - ஆறியிருக்கமாட்டாத பஞ்சேந் திரியங்களாகிற பிரபலக் கொடியவர்களை
யான் என்று வெல் கிற்பன்,Yaan Endru Vel Kirpan - அடியேன் என்றைக்கு வெல்ல வல்லவனாவேன்?