| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3344 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எனக்குண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை யறுத்து, மனமொழி மெய்களாலே உன்னையே நான் நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார்.) 8 | இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8 | என் அம்மா,En Amma - என் ஸ்வாமியே! என் கண்ணா,En Kanna - எனக்கு எளியவனானவனே! இமையோர் தம் குலம்; முதலே,Imayor Tam Kulam; Mudhale - நிக்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனே! ஒர் ஐவர்,Or Aivar - சப்தாதி விஷயங்கள் ஐந்தும் இன் அமுது என தோன்றி,Inn Amudhu En Thondri - இனிய அமிருதம் போல் போக்யமாய்த் தோன்றி யாவரையும் மயக்க,Yaavaraiyum Mayakka - எப்படிப்பட்டவர்களையும் மயக்கும் படியாக நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம்,Nee Vaittha Munnam Maayam Ellam - நீ உண்டாகி வைத்த அநாதியான ஸம்ஸாரத்தை யெல்லாம் முழுவேர் அரிந்து,Muzhuver Arindhu - வாஸநையோடே போக்கி என்னை,Ennai - அடியனே உன் சின்னமும் திரு மூர்த்தியும்,Un Chinnamum Thiru Moorthiyum - உனது அஸாதாரண லக்ஷ்ணங்களான சங்கசக்ராதிகளையும் திவ்யமங்கள் விக்ரஹத்தையும் சிந்தித்து,Sindhitthu - நெஞ்சார நினைத்து ஏத்தி,Etti - வாயாரத் துதித்து கை தொழ,Kai Thoza - கையாரத் தொழும் படியாகப் பண்ணி எனக்கே அருள்,Enakke Arul - எனக்கென்று விசேக்ஷித்த க்ருபையைப் பண்ண வேணும். |