திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3346 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3346திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளிலே அடிமை செய்கைக்கு இடையூறாய் விஷயாநுபவங்களுக்குப் பாங்கான உடம்பை எனக்குத் தந்தாய்; அதுவே ஹேதுவாகப் பஞ்சேந்திரியங்களும் பெறுக்கவொண்ணாத ஹிம்ஸைகளைச் செய்கின்றன; அவற்றைப் பரிஹரித்தருளவேணும் என்று ஆர்த்தியோடே பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.) 10
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர் முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10
பதவுரை Show / Hide
முன்,mun - முன்பொரு காலத்திலே
பரவை அடைந்து,paravai adainthu - சுடலைக் கடைந்து
அமுதம் கொண்ட மூர்த்தி,amudham konda moorthi - அமுதத்தை யெடுத்து உதவிய ஸ்வாமியே!
என் பரம் சுடரே,en param sudare - எனக்கு விதேயனான பரஞ்சோதியே! என்றிப்படி உன்னை நோக்கிக் கூப்பிட்டு
உன் இணைதாமரை கட்கு,un inaithamarai kadgu - உனது உபய பாதங்கள் விஷயத்திலே
அன்பு உருகிநிற்கு மது நிற்க,anbu uruginirku madhu nirka - அன்பினாலே உருகியிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க (அதற்கு விரோதமாக)
சுமடு தந்தாய்,sumadu thandhai - ((அதற்கு விரோதமாக) சரீரமாகிற) சும்மாட்டைத் தந்தாயே! (அதனால்)
வன் பரங்கள் எடுத்து,van parangal eduthu - பிரபலமான விஷயபாரங்களைச் சுமத்தி
ஐவர்,aivar - பஞ்சேந்திரியங்கள்
திசை திசை,disai disai - ஒவ்வொரு முலையாக
வலித்து,valithu - இழுத்து
எற்றுகின்றனர்,etrugindranar - பீடிக்கின்றனர்;
ஓ,o! - இது பொறுக்கமுடிய வில்லையே.