| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3347 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப் புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும் கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11 | குணங்கள் கொண்ட,gunangal kondha - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட. மூர்த்தி ஓர் மூவர் ஆய்,moorthi or moovar aay - மும்மூர்த்திகளுமாய் படைத்து அளித்து கெடுக்கும்,padaitthu alithu kettum - ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய் அப்புண்டரீகம் கொப்பூழ்,appundariyam koppuul - அப்படிப்பட்ட பத்மநாபனாய் புனல் பள்ளி அப்பனுக்கே,punal palli appanuke - காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,thondar thondar thondan sadagopan - தாஸாது தாஸராண ஆழ்வார் சொல் ஆயிரத்துள்,sol aayiraththul - அருளிச் செய்த ஆயிரத்தினுள் இப் பத்தும்,ip pattum - இப் பத்துப் பாசுரங்களையும் கங்குலும் பகலும்,Kangulum pagalum - ஸதாகாலமும் கண்டு பாட வல்லார்,kandu paada vallaar - பொருள் கண்டு பாடவல்லாருடைய வினை போம்,vinai poam - பாவங்கா தொலைந்துபோம். |