Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3348 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3348திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 1
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1
செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய், Sem kayal paay neer thiru arangaththai - அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே!
கங்குலும் பகலும், Kangulum pagalum - இரவும் பகலும்
கண் துயில் அறியாள், Kan thuyil ariyaal - கண்ணுறங்கப் பெறுகின்றிலள்;
கண்ண நீர் கைகளால் இறைக்கும், Kanna neer kaigalaal iraikkum - கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்;
சங்கு சக்கரங்கள், Sangu chakkarangal - திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன
என்று கை கூப்பும், Endru kai kooppum - என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்;
தாமரை கண் என்றே தளரும், Thaamarai kan endrae thalarum - (என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்;
உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும், Unnaivittu engganae tharikken endrum - (பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்;
இரு நிலம், Iru nilam - விஸ்தீர்ணமான பூதலத்தை
கை துழவிருக்கும், Kai thuzhavirukkum - கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!)
இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயத்தில்
என் செய்கின்றாய், En seikindraai - ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்?