| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3349 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 2 | என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும் முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2 | என் தாமரை கண்ணா, En thamarai kanna - என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே! என் செய்கின்றாய் என்னும், En seikindraai ennnum - என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்; கண் நீர் மல்க இருக்கும், Kan neer malga irukkum - கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்; எறி நீர் திரு அரங்கத்தாய், Eri neer thiru arangaththaai - அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே! என் செய்கேன் என்னும், En seiken ennum - (உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்; வெவ்வு யிர்த்து உயிர்த்து, Vevvu yirthu uyirthu - வெப்பமாகப் பலகாலும் பெரு மூச்சு விட்டு உருகும், Urugum - கரைகின்றாள்; முன் செய்த வினையே, Mun seitha vinaiye - முற்பிறவிகளிலே நான் பண்ணி வைத்த கருமமே! முகப்படாய் என்னும், Mugappadaai ennum - என் கண்முன்னே வந்து நில் பார்ப்போம் என்கிறாள்; முகில் வண்ணா, Mugil vanna - காளமேகவண்ணனான எம்பெருமானே! இது தகவோ என்னும், Idhu thagavo ennum - இதுதானோ உன்னுடைய க்ருபைக்கு லக்ஷ்ணம்! என்கிறாள்; இவ்உலகம், Ivulagam - இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம் முன் செய்து , Mun seithu - முற்காலத்தில் ஸ்ருஷ்டித்து உண்டு உமிழ்ந்து ,undu umizhndhu - (காலவிசேஷங்களிலே) உண்பதும் உமிழ்வதும் செய்து அளந்தாய், Alaandhaai - அளப்பதும் செய்து பல முகமாக ரக்ஷித்தருளும் பெருமானே! இவட்கு, Ivatku - இங்ஙனே துடிக்கிற எபெண் பிள்ளைக்கு முடிகின்றது என் கொலோ, mudikindradhu en kolo - இந்தப் பரிதாபமெல்லாம்) என்னாய் முடியப்போகிறதோ? |