Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3350 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3350திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 3
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3
இறையும் வட்கு இலள், Iraiyum vatku ilal - சிறிதும் வெட்கமில்லா தவளாகி
மணிவண்ணா என்னும், Manivanna ennum - நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்!
வானமே நோக்கும், Vaaname nokkum - (யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்;
மையாக்கும், Maiyaakkum - (எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்;
உட்கு உடை அசுரர், Utku udai asurar - வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய
உயிர் எல்லாம் உண்ட, Uyir ellaam undu - பிராணன்களை யெல்லாம் கவர்ந்த
ஒருவனே என்னும், Oruvane ennum - அத்விதீயனே! என்கின்றாள்;
உள் உருகும், Ul urugum - உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்;
கட்கு இலீ, Katku ilee - கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே!
காகுத்தா கண்ணனே, Kaakutha kannane - ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும் விஷயங்மானவனே!
உன்னை காணும் ஆறு அருளாய் என்னும், Unnai kaanum aaru arulaai ennum - உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்;
திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய், Thin kodi madhil soozh thiru arangaththaai - திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே!
இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயமாக
என்செய்திட்டாய், En seithitaai - நீ செய்தது என்னே!