| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3351 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 4 | இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்; ‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்; ‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4 | இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும், Idakkal ittakaiyal aai irukkum - (சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்; எழுந்து உலாம், Ezhundhu ulam - எழுந்து உலாவுகின்றாள்; மயங்கும், Mayangum - மயங்கா நின்றாள்; கை கூப்பும், Kai kooppum - (அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்; காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும், Kaadal kattame endrudame endru moorchikkum - (பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்; கடல்வண்ணா கடியை காண் என்னும், Kadal vanna kadiyai kaan ennnum - கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்; வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும், Vattam vaai nemi valam kaiya ennnum - வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்; வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidai endru endre mayangum - வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்; சிட்டனே!, Sittane! - பரமபவித்திரனே! செழு நீர் திரு அரங்கத்தாய், Sezhuneer thiru arangkaththaai - நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே! இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக என்சிந்தித் தாய், Ensindhithaai - நீ சிந்தித்திருப்பது என்ன? |