| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3352 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 5 | சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; ‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே! சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5 | அந்தி போது, Andhi podhu - மாலைபொழுதிலே அவுணன் உடல் இடந்தானே, Avunan udal idandhaane - (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே! அலை கடல் கடைந்த ஆர் அமுதே, Alai kadal kadaindha aar amudhe - அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே! சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே, Sandhithu un saraname saaleevadhu valitha thaiyale maiyal seithaane - உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! சிந்திக்கும், Sindhikkum - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்; திசைக்கும், Thisaikkum - அறிவு அழியா நின்றாள்; தேறும், Therum - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள் கைகூப்பும், Kaikooppum - அஞ்சலி பண்ணாநின்றாள்; திரு அரங்கத்து உள்ளாய் என்னும், Thiru arangathu ullaai ennum - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்; வந்திக்கும், Vandhikkum - தலைவணங்கா நின்றாள்; ஆங்கே, Aange - அவ்வளவிலே மழை கண் நீர் மல்க, Mazhai kan neer malga - கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidaai endru endre mayangum - (எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள். |