திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3354 | திருவாய்மொழி || (7-2–கங்குலும் பகலும்) - ((பாலதுன்பங்கள்.) எம்பெருமானுடைய ஸ்ருஷ்டி க்ரமத்தை நோக்குமிடத்த இன்பதுன்பங்களை அந்தந்த ஆச்ரயங்களுக்குத் தகுதியாக அமைக்கின்றபடியைக் காணாநின்றோம்.) 7 | ‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7 | பதவுரை Show / Hideஎன்னுடை கோமளம் கொழுந்து, Ennudaiya komalam kolundhu - மிக மெல்லியலாளான என்மகள் பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும், Paala thunbangal inbangal padaitthaai ennum - அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்: பற்று இலார் பற்ற நின்றானே என்னும், Patru ilaar patra nindraane ennum - அசரண்ய சரண்யனே! என்கிறாள்; கால சக்கரத்தாய் என்னும், Kaala sakkaraththaai ennum - காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்; கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும், Kadal idam konda kadal vanna ennum - திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்; கண்ணனே என்னும், Kannane ennum - ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்; சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும், Sel kolthan punal soozh thiru arangath thaai ennum - மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்; என்தர்த்தானே என்னும், Entharthaane ennum - என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்; கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும், Kolam maamazhai kanpani malga irukkum - அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள். |