திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3355 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3355திருவாய்மொழி || (7-2–கங்குலும் பகலும்) - ((கொழுந்து) பிரானே! உன்னுடைய பரத்வ்தையும ஸௌலப்யத்தையும் மாறிமாறி யநுஸந்தியா நின்றாளென்மகள்; வானவர்கட்குக் கொழுந்தே! என்று பரத்வத்தைப் பேசினவாறே கோநிரை காத்தவனே என்று ஸௌலப்யத்தைப பேசுகின்றாள்; குன்றேந்தினவனே! என்ற பின்னையும் ஒரு பரத்வத்தைப் பேசுகின்றாள். பரத்வத்தைக்கண்டு இகழாமைக்காகப் பரத்வத்தைப் பேசுவதும் மாறிமாறிச் செல்லுமே மெய்யன்பர்களுக்கு. அழும் தொழும்-பக்தி பரவசரைப்போலே கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற படியும். ப்ரபந்நரைப்போலே அஞஜலிபந்தம் பண்ணாநிற்கிறபடியும் சொல்லிற்றாயிற்று. ஆவியானல் வெவ்வுயிர்க்கும்-கீதையிலே ஆத்மஸ்வரூபத்தைப் பேசும் போது அச்சேத்யோயம் என்று சொல்லிற்று. ஆவியானது தஹிக்கவொண்ணாதது என்றபடி. அப்படிப்பட்ட ஆவியும் தஹித்தகாம்படி வெப்பமாகப் பெருமூச்சு விடுகின்றாள். தன்னை இப்படியாக்கின்றது அஞ்சனமேனி யாகையாலே அதைச் சொல்லிக் கூப்பிடுகின்றார்-அஞ்சனவண்ணனே! என்கின்றாள். அங்ஙனம் கூப்பிட்டவாறே நீ வரக்கூடுமென்று எண்ணி எழுந்து மேல் நோக்குகின்றாள்; ஒரு க்ஷ்ணம் தோற்றி மறைந்து விடுவாயோவென்று இமையாதே யிருக்கின்றாள். (எங்ஙனே நோக்ககேனென்னும்) ஈடு;- “தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளுமென்று புரிந்து பாராநிற்கும்.” என் திருமகட்கு என் செய்கேன் -இவளுக்காக நான் ஏதேனும் உபாயக் அனுட்டிக்கலாகுமோ? என்னவுபாயத்தை யனுட்டிப்பேன். பிராட்டி உம்முடைய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறாப்போலே இவளும் உம்மை அகலகில்லாதே உம்மோடே பொருந்தியிருக்க வேண்டியவளன்றோ?) 8
கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்; அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்; எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்; செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8
பதவுரை Show / Hide
வானவர்கட்கு கொழுந்து என்னும், Vaanavargatku kozhundhu ennum - நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்;
குன்று ஏந்தி, Kunru endhi - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று
கோ நிரை காத்தவன் என்னும், Ko nirai kaathavan ennum - பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்;
ஆழும், Aazhum - கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்;
தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றான்;
ஆவி அனல் வெவ்வுயிர்க்கும், Aavi anal vevvuyirkkum - ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்;
அஞ்சனம் வண்ணனே என்னும், Anjanam vannane ennum - அஞ்சனனேமனியனே! என்கிறாள்!
மேல் எழுந்து நோக்கி, Mel ezundhu nokki - (இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) மேலே தலையெடுத்துப் பார்த்து
இமைப்பு இலள் இருக்கும், Imaippu illal irukkum - இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்;
எங்ஙனே நோக்கு கேன் என்னும், Engane nokku ken ennum - எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்;
செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய், Sezhu thadam punal soozh thiru arangath thaai - மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே!
என் திருமகட்கு, En thiru magatku - பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே
என் செய்கேன், En seiken - எதைச் செய்வனே?