| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3360 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாள் கீழ்ப்பாட்டில் அவ்வளவிலே இத்தலைமகளுக்கு ஹிதஞ் சொல்லுகைக்காகத் தாய்மாரும் தோழிமாரும் அயற் சேரியுள்ளாருமாகத் திரண்டு வந்து சேர்ந்து நிற்க, உங்களுடைய ஹிதவார்த்தைகளைக் கேட்க அவகாசமில்லாதபடி. மகரநெடுங்குழைக்காதன் பக்கலிலே அவகாஹித்த என்னெஞ்சை மீட்கமாட்டுகின்றிலேன் காண்மின் என்கிறாள்.) 2 | நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்! நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்த் தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2 | நானம் கருகுழல் தோழி மீர்காள்,Naanam karukuzhal thozhi meerkal - ஸூகந்தமணிந்த கருங்குழலையுடைய தோழிகளே! அன்னையர் காள்,Annaiyar kaal - தாய்மார்களே! அயல் சேரியீர் காள்,Ayal seriyir kaal - (செய்தி வினவ வந்த) அக்கம் பக்கத்தவர்களே! இத்தினி நெஞ்சும நான் காக்க மாட்டேன்,Itthinin nenjum naan kaakka maattean - ஸவாந்திரமான இந்த நெஞ்சை நான் அடக்கியாள மாட்டுகின்றிலேன்; இது என்வசம் அன்று,Idhu envasam anru - இந்த நெஞ்சு எனக்கு விதேயமன்று; இரா பகலும்,Ira bagalum - இரவும் பகலும் போய்;,Poi; - என்னை விட்டுப்போய் தேன் மொய்ந்த பூ பொழில்,Then moyndha poo pozhil - வண்டுகள் மொய்த்த பூஞ்சோலைகளை யுடைத்தாய் தண் பணை சூழ்,Than panai sooel - குளிர்ந்த நீர் நிலங்கள் சூழ்ந்திருக்கிற வானம் பிரான்,Vaanam piran - தென் திருப்பேரெயில் வீற்றிருந்த; பரமபத நிலயனும் மணிவண்ணன்,Manivannan - நீலமணி வண்ணனுமான கண்ணன்,Kannan - கண்ணபிரமானுடைய செம் கனி வாயின் திறத்தது,Sem kani vaayin thirathadhu - சிவந்த கனிபோன்ற அதரத்திலே படிந்திட்டது. |