| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3361 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! இப்படியும் நானமற்றுச் சொல்லுவது தகுதியேவென்று தோழி கேட்க: தோழீ! நான் என்செய்வேன்? எனது நெஞ்சானது தென் திருப்பேரை யெம்பெருமானுடைய திருப்பவளத்தழகிலே போய்ப்படிந்தும் திருவபிஷேகத்தினழலே தாழ்ந்தும், திருவாழி திருச்சங்குகளே யேந்தியிருக்குமழகுகண்டு உகந்தும், மற்றோரழகுக்கு உரித்தரல்லாதபடி தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் நங்கள் பிரானுக்கு நாணும் நிறைவுமிழந்தது; இனி யெனக்கு நாணும் நிறைவுமுண்டாவதற்கு வழியேது? என்கிறாள் தலைவி.) 3 | செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3 | தோழீ,Thozhi - வாராய் தோழியே! என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது செம் கனி வாயின் திறத்தது ஆயும்,Sem kani vaayin thirathadhu aayum - செவ்விய கனி போன்ற திருப்பவளத்திலே அபிநிவேசம் கொண்டதாயும் செம் சுடர் நீள்முடிவு தாழ்ந்தது ஆயும்,Sem sudar neelamudivu thaazhndhadhu aayum - செவ்விய சுடரையுடைய நீண்ட கிரீடத்திலே ஈடுபட்டதாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,Sangodu chakkaram kandu ukanthum - திருவாழி திருச்சங்குளைக் கண்டு உவந்ததாயும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்,Thaamarai kangalukku atru theerndhum - தாமரை போன்ற திருக்கண்களுக்கு அநந்யார் ஹமாகியும் திங்களும் நாளும் விழா அறாத,Thingalum naalum vizha araadhu - மாஸோத்ஸவர்களும நித்யோத்ஸவங்களும் இடையறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppereyil veettrirundha - தென் திருப்பேரைப் பதியிலே யெழுந்தருளியிருக்கின்ற நங்கள் பிரானுக்கு,Nangal piranuku - எம்பெருமான் விஷயத்திலே நாணும் நிறையும் இழந்தது,Naanum niraiyum izhandhadhu - வெட்கமும் அடக்கமும் தொலையப் பெற்றது. |