Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3362 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3362திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம்-அவனுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்ட என் நெஞ்சம் அங்கே போயிற்று – இனி யாரைக் கொண்டு போது போக்குவது என்று நியமிக்கிற தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 4
இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4
அன்னையர்காள்,Annaiyarkaal - தாய்மார்களே!
இழந்த எம்மாமை திறத்து போன,Izhandha emmaamai thirattu poana - ஏற்கனவே யிழந்த எனது மேனி நிறத்தைக் திருப்பிக் கொணர்வதாகப் புறப்பட்டுச் சென்ற
என் நெஞ்சி னாரும்,En nenjin aarum - எனது நெஞ்சென்கிற பெரியாரும்
அங்கே ஒழிந்தார்,Angae ozhindhaar - அத்தலைக்கே அற்றுத் தீர்ந்தார்;
இனி,Ini - அந்தரங்கமான நெஞ்சையுமிழக்கப் பெற்ற பின்பு
உழந்து,Uzhandhu - வருத்தி
ஆரை கொண்டு,Arai kondu - யாரைத் துணையாகக் கொண்டு
என் உசாகோ,En usaago - எந்த வார்த்தையைச் சொல்லித்தரிப் பேன்!;
ஓதம் கடல் ஒலி பால,Odham kadal oli paal - அலைபெறியும் கடலின் ஒலிபோல
எங்கும் எழுந்த,Engum elundhu - எல்லாவிடத்திலுங்கிளர்ந்த
நல் வேதத்து ஒலி,Nal vedathu oli - ஸாமவேத கோஷமானது
நின்று ஓங்கு,Nindru oongu - நிரந்தரமாகக் கிளர்ந்து
தென் திருப்பேரெயில்விற்றிருந்த;,Then thiruppereilvitrirundha; - தென் திருப்பேரெயில்விற்றிருந்த;
முழங்கு சங்கம் கையன் மாயத்து,Muzhangu sangam kaiyan maayathu - முழங்குகின்ற சங்கத்தைத் திருக்கையிலே யுடையனான பெருமானது மாய்ச் செயல்களிலே
ஆழ்ந்தேன்,Aazhndhaen - அவகாஹித்தேன்;
என்னை முனிந்து என,Ennai munindhu en - (இனி) என்னைச் சீறு வதனால் என்ன பலனுண்டாம்?