| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3363 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (தென்திருப்பேரெயிலிலே என்னைக் கடுகக் கொண்டு சென்று சேர்ப்பதே தாய்மார்களான் வுங்களுக்கு உற்றது என்கிறாள்.) 5 | முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க் கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5 | அன்னைமீர்கள்,Annaimirkal - தாய்மார்களே! முனிந்து சகடம் உடைத்து,Munindhu sakadam udaittu - கோபத்தினால் சகடா சுரைனை யுதைத் தொழித்தவனும் மாயம் பேய்முலை உண்டு,Maayam peymulai undu - வஞ்சகப்போய் வடிவாக வந்து பூதனையின் முலையை யுண்டு அவளை முடித்தவனும் மருதிடை போய்,Maruthidai poi - இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து செறைவனும் கனிந்த விளவுக்கு கனறு எறிந்த –,Kanindha vilavukku kanru erindha - - விளங்கனியின் மீது வத்ஸாஸூரனை வீசியெறிந்தவனுமான கண்ணபிரானுக்கு,Kannapiranuku - கண்ணபிரான் விஷயத்திலே என் பெண்மை தோற்றேன்,En penmai thoraen - என்து பெண்மைக்குரிய அடக்கம் முதலானவற்றை பெற்றேன்; இனி,Ini - இப்படியான பின்பு முனிந்து என் செய்தீர்,Munindhu en seytheer - என்னைச் சீறுவதனால் என்ன லாபம் பெறப்பார்க்கிறீர்கள்; அவன் முன்னி வந்து வீற்றிருந்த,Avan munni vandhu veettrirundhu - அப்பெருமான் முற்கோலி வந்து எழுந்தருளியிருக்குமிடமான கனிந்த பொழில் திருபேரெயிற்கே,Kanindha pozhil thirupereikke - பரிபக்குவமான சோலைகளையுடைய திருப்பேரெயில் தலத்திற்கே என்னை,Ennai - என்னை காலம்பெற காட்டுமின்,Kaalamperra kaattumin - காலதாமதமில்லாமல் கொண்டு போய்க் காணச் செய்மின். |