| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3365 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம்.) 7 | பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்; ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை; ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7 | பேர் எயில் சூழ்,Per eyil sooel - பெரிய மதில்களாலே சூழப்பட்டு கடல்,Kadal - கடலிடத்தே யுள்ளதான தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்காபுரியை செற்ற,Sera - நீறாக்கி யொழித்த பிரான்,Piran - எம்பெருமான் வந்து வீற்றிருந்த,Vandhu veettrirundha - வந்து எழுந்தருளியிருக்குமிடமான பேர் எயிற்கே,Per eyirke - திருப்பெரெயில் தலத்திற்கே என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது புக்கு,Pukku - புகுந்து நாடி,Naadi - அவனைத் தேடி பேர்த்து எங்கும் வரகாண மாட்டேன்,Perthu engum varakaana maattean - மீண்டு ஒரிடத்திற்கும் வரக்காணேன்: தோழி –!.,Thozhi –!. - வாராய் தோழியே இனி இங்கு யாரை உடையம்,Ini ingu yaarai udaiyam - இனி இந்நிலைமையில் யாரைக் துணையாக வுடையோம்? என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,En nenjam koova vallaarum illai - (என்னை விட்டுப்போன) எனது நெஞ்சை அழைத்துத் தரவல்லாருமில்லை; இனி,Ini - நெஞ்சம் உதவாதே நீயும் தளர்ந்தபின்பு ஆரை கொண்டு என்சாதிக் கின்றது,Arai kondu enchaadikindradhu - யாரைத் துணைகொண்டு என்ன பிரயோஜனம் ஸாதிக்கத் தக்கதாயிருக்கின்றது? (ஒன்று மில்லையே.) என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்,En nenjam kandadhuvae kandeen - (ஆகையாலே) எனது நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கடைப்படித்தேன். |