Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3366 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3366திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஊரார் பழி சொல்வதே பெருவாக எனக்கு வளர்ந்து செல்லுகின்ற காதாலனது ஸகலலோகங்களையும் கபளீகரித்துச் செல்லா நின்றது; ஆனபின்பு அவனிருந்த திருப்பேரையிலே சென்றல்லது நிற்க மாட்டேனென்கிறாள்.) 8
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8
கண்டதுவே கொண்டு,Kandadhuvae kondu - வெளியில் காணக்கூடிய எனது மேனி நிறமாறுதல் முதலிய வற்றையே கொண்டு
எல்லாரும்,Ellaarum - தாய்மார் ஊரர் ஆகிய எல்லாரும்
கூடி,Koodi - ஒன்றுசேர்ந்து
கார் கடல் வண்ணனோடு என் திறத்து கொண்டு,Kaar kadal vannanodu en thirathu kondu - கருங்கடல் வண்ணனான எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்க்கை யுண்டாதாகக் கொண்டு
அலர் தூற்றிற்றது முதல் ஆ கொண்ட,Alar thoottrittadhu mudhal aa kondu - பழி தூற்றினதுவே முதலாக இடங்கொண்ட
என் காதல் உரைக்கில்,En kaadhal uraikgil - எனது காதலைப பாசுரமிட்டுச் சொல்லிப் பார்க்கில்
தோழீ,Thozhi - தோழீயே!,
மண் திணி ஞாலமும்,Man thini nyaalamum - (என்காதல் எப்படிப் பட்டதென்னில்) மண் செறிந்த பூமியும்
ஏழ் கடலும்,Ezhu kadalum - (அதைச் சூழ்ந்த) ஸப்த ஸகாரங்களும்
நீள் விசும்பும்,Neel visumbum - இதெல்லாவற்றுக்கும் இடங்கொடுக்கும் மஹாவகாசமான ஆகாதமும் ஆகிய இத்தனைக்கும்
கழிய,Kazhiya - அவ்வருகுபட்டதாய்
பெரியது ஆல்,Periyadhu aal - பெருந்திராநின்றது; (ஆனபின்பு)
தெண் திரை சூழ்ந்து,Then thirai sooelndhu - தெளிந்த அலைகளாலே சூழப்பட்டு
அவன்வீற்றிருந்த,Avan veettrindha - அப்பெருமான்வீற்றி ருக்குமிடமான
தென் திருபேர் எயில்,Then thiruper eayil - தென் திருப்பேரைப் பதியை
சென்று சேர்வன்,Sendru servan - எனது தாபம் தீரும்படி சென்று சேரக்கடவேன்