| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3367 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரளய ஆபத் சகனானவன் வர்த்திக்கிற தேசத்திலே சென்று புகத் தவிரேன் – நீங்கள் என்னைத் தேற்றி யுரைக்கிற இதுக்கு பிரயோஜனம் இல்லை என்று தோழிமாரையும் தாய்மாரையும் பார்த்துச் சொல்லுகிறாள்.) 9 | சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா; நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை; கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9 | என்னுடைய தோழிமீர்காள்,Ennudaiya thozhimeerkal - எனக்கு ஹிதஞ் சொல்லுகின்ற தோழிமார்களே! அன்னையர்காள்,Annaiyarkal - (அப்படிப்பட்ட) தாய்மார்களே! என்னை தேற்றவேண்டா,Ennai thettravenda - (எல்லை கடந்த) என்னைத் தேற்றுவதில் நீங்கள் முயல வேண்டா இதற்கு,Idharku - எனது இந்த நிலைமைக்கு நீர்கள் உரைக்கின்றது என்,Neerkal uraikkindradhu en - நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்ன இருக்கிறது? எனக்கு நெஞ்சும் நிறைவும் இங்குஇல்லை,Enakku nenjum niraiyum inguillai - எனது நெஞ்சும் அடக்கம் முதலிய குணங்களும்; இங்கில்லை யன்றோ; (ஆதலால்) கார் வண்ணன்,Kaar vannan - நீல வண்ணனும் கார் கடல் ஞாலம்; உண்ட,Kaar kadal nyaalam; unda - கருங்கடல் சூழ்ந்த ஜகத்தை (ப்ரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனுமான கண்ண பிரான்,Kann piran - ஸ்ரீக்ருஷ்ணபகவான் வலது வீற்றிருந்த,Valathu veettrirundha - நித்ய ஸந்நிதி பண்ணியிருக்குமிடமாய் ஏர் வளம்,Aer valam - ஏரினுடைய மிகுதியை யுடைத்தாய் ஒண் கழனி பழனம்,On kalanipazhanam - அழகிய கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைத்தான தென் திரு பேர் எயில்மா நகர்,Then thiru peer eyilma nagar - தென்திருப்பேரெயிலென்கிற திருப்பதியை சென்று சேர்வேன்,Sendru saerven - சென்று சேரக்கடவேன். |