| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3369 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும் ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11 | ஊழி ஊழி தோறு,Oozhi oozhi thoru - கல்பங்கள் தோறும் பேரும் உருவும் செய்கையும்,Perum uruvum seykaiyum - நாமம் ரூபம் வியாபாரம் ஆகிய இவற்றை வேறவன்,Veraavan - வேறாகவுடையனாய்க் கொண்டு வையம் காக்கும்,Vaiyam kaakkum - உலகங்களைக் காத்தருள் பவனாய் ஆழி நீர் வண்ணனை,Aazhi neer vannanai - கடல் வண்ணனாய் அச்சுதனை,Achchudhanai - அடியார்களை ஒருகாலும் நழுவ விடாதவனான பெருமானைக் குறித்து அணி குருகூர்சடகோபன் சொன்ன,Ani KuruKoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த கேழ் இல்,Kael il - ஒப்பில்லாத அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Anthaadi or aayiraththul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்ளும் திருப்பே ரெயில் மேய இவை பத்தும்,Thiruppeer eyil meya ivai pattum - தென் திருப்பேரைப்பதி விஷயமான இப்பதிகத்தைக் கொண்டு ஆழி அம்கையனை ஏத்த வல்லார் அவர்,Aazhi amkaiyanai etta vallaar avar - கையுந் திருவாழியுமான எம்பெருமானைத்துதிக்கவல்லவர்கள் அடிமை திறத்து,Adimai thirattu - நித்ய கைங்கர்யத்திலே ஆழியார்,Aazhiyaar - ஆழ்ந்தவராவர். |