திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3373 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 4 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4 | பதவுரை Show / Hidenaal ezvum,நாள் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும் nilam neer ezvum,நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும் vinnum koalum ezhu,விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும் eri kaalum ezhu,எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும் malai thaal ezvum,மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும் sudarthaanum ezhu,சுடர்தானும் எழ - நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ooli ezhu ulagam unda oon,ஊளி எழ உலகம் உண்ட ஊண் - ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்! |