| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3374 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 5 | ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5 | appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான் kaanudai bharatham kai arai pothu,காணுடை பாரதம் கை அறை போழ்து - ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது, oon udai mallar thadarndha oli,ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி - வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும் mannar,மன்னர் - அரசர்களினுடைய aan udai senai,ஆண் உடை சேனை - வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை nadungum oli vinnull,நடுங்கும் ஒலி விண்ணுள் - நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே aen udai devar,ஏண் உடை தேவர் - மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள் velippatta oli,வெளிப்பட்ட ஒலி - (யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின |